மது போதையில் ரகளை செய்தேனா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

மது போதையில் ரகளை செய்தேனா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் மதுபோதையில் பிரச்சினை செய்ததாக அவர் குடியிருந்த குடியிருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். நான் அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு வருகிறேன். மேலும் நான் டயட்டில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் நான் எப்படி மது அருந்துவேன்? ஒரு லாஜிக் வேண்டாமா?

இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறுகின்றனர். ஒரு சினிமாக்காரன் என்ற வகையில் சினிமா தொடர்பான நபர்கள் தினமும் என்னை சந்திக்க வந்து கொண்டிருப்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய அவர்கள் இதுபோன்ற புகார்களை தெரிவித்துள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார்

6 pack dont suddenly appear if you drink everyday..
You got to be on strict diet and off alcohol completely for a long time..
Some people dont understand the LOGIC...

— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) January 23, 2021

LATEST News

Trending News

HOT GALLERIES