தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது?- கடும் சோகத்தில் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிறைய தொகுப்பாளினி பணிபுரிகிறார்கள். இப்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா.
இவரும், மாகாபா ஆனந்தும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சிகள் படு ஹிட்டாகியுள்ளன. கடந்த சில நாட்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.
எப்போதும் போல புரொமோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு ஷாக். அதாவது இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மணிமேகலை நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
இதனால் ரசிகர்கள் பிரியங்காவிற்கு என்ன ஆனது அவர் ஏன் நிகழ்ச்சியில் இல்லை என கடும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.