பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் -நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் -நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ச்சியாக காலமாகி வரும் நிலையில் இன்று தமிழ் திரையுலகின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜிஆர் என்று கூறப்படும் ஜி ராமச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 73.

நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் ’மனுநீதி’ ’சவுண்ட் பார்ட்டி’ ’எங்க ராசி நல்ல ராசி’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னட மொழிகளிலும் அவர் சில படங்களில் நடித்தும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த தயாரிப்பாளர் ஜிஆர், இன்று காலை காலமானார். அவருடைய மனைவி பூரணி என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், தயாரிப்பாளர் ஜி ராமச்சந்திரன் மறைவை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES