சூர்யாவின் பாட்டிற்கு நடனமாடிய முன்னணி சீரியல் நடிகைகள்..! ஒன்றாக இணையும் இரண்டு மெகா தொடர்கள்..
பிரபல தொலைக்காட்சியான சன்-டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் தான் கண்ணானே கண்ணே மற்றும் அன்பே வா. சமீபத்தில் ஆரம்பமான இந்த இரண்டு தொடர்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று, மெகா தொடர்கள் ஆகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு மெகா தொடர்களும் இணைந்து ஒளிபரப்பாகவுள்ளது, மேலும் இதன் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே தற்போது ரோஜா சீரியல் நடிகை மற்றும் அன்பே வா சீரியல் நடிகை இருவரும் இணைந்து சூர்யாவின் பாட்டிற்க்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..