மீண்டும் ரஜினியுடன் மோதும் தல அஜித் - இந்த முறை வெற்றி யார் பக்கம்

மீண்டும் ரஜினியுடன் மோதும் தல அஜித் - இந்த முறை வெற்றி யார் பக்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் படங்களை தரும் நடிகர்களாகவும் விளங்கி வருபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் அஜித்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அதே போல் தல அஜித்தும், எச் வினோத் இயக்கிவரும் வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இதில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் படப்பிடிப்புகள் முடித்து போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் வேலைகளை எல்லாம் முடிந்து தீபாவளிக்கு வரும் என கூறப்படுகிறது.

அதே போல் வலிமை படமும் அணைத்து வேலைகளும் முடித்து, கண்டிப்பாக இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இதனால் விஸ்வாசம், பேட்ட படங்கள் மோதிக்கொண்டதை போல், இந்த இரு படங்களும் மோதிக்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

மேலும் விஸ்வாசம், பேட்ட போட்டியில் அஜித்தின் விஸ்வாசம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் வென்றது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES