குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அட்டகாசம் செய்த STR, வெளியான ப்ரோமோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, பவித்ரா, கனி உள்ளிட்டோர் போட்டி போடவுள்ளனர்.
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் எதிர்பார்த்தது போலவே நடிகர் STR சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
மேலும் STR அங்கிருந்த அனைவருடனும் செம ஜாலியாக கொண்டாடியுள்ளார். பாலா, புகழ் என முக்கிய கோமாளிகளுடன் ஜாலியாக இருக்கும் STR-யை கண்ட ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
`