நடிகர் ஜெய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு- சூப்பர் புகைப்படங்கள்

நடிகர் ஜெய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு- சூப்பர் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் படு வேகமாக படங்கள் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருபவர் நடிகர் சிம்பு.

நடுவில் உடல்எடை போட்டு, படங்கள் நடிக்காமல், சில சர்ச்சைகளில் சிக்கி என ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் துளி கூட அவரை வெறுக்கவில்லை.

ஒரு தூண் போல சிம்புவிற்கு பாதுகாப்பாகவே இருந்தனர். இந்த நிலையில் தான் லாக் டவுன் சமயத்தில் உடல்எடை முழுவதும் குறைத்து புதிய மனிதர் போல் தோன்றினார் சிம்பு.

ஈஸ்வரன், மாநாடு என படங்கள் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அண்மையில் இரவு, பகலாக மாநாடு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

நேற்று சிம்பு மாலை நேரத்தில் தனது ஓட்டையும் பதிவு செய்திருந்தார். அதோடு நேற்று நடிகர் ஜெய்யின் பிறந்தநாள், அவரது பிறந்தநாளை நடிகர் சிம்பு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES