சிவகார்த்திகேயனுக்கு ஜோடியனாரா குக் வித் கோமாளியின் முக்கிய பிரபலம், பூஜையுடன் தொடங்கிய திரைப்படம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, பவித்ரா, கனி உள்ளிட்டோர் போட்டி போடவுள்ளனர்.
இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான முக்கிய போட்டியாளர் தான் பவித்ரா, சின்னத்திரையில் பிரபலமான பவித்ரா தற்போது பெரிய திரையிலும் அறிமுகமாகவுள்ளார்.
ஆம், AGS தயாரிக்கும் படத்தில் நடிகர் சதிஷ் உடன் பவித்ரா நடிக்கவுள்ளார். இன்று நடந்துள்ள இப்படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
மேலும் முக்கிய நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக தான் பவித்ரா இப்படத்தில் நடிக்கவுள்ளார், பூஜையில் சிவகார்த்திகேயனுடன் பவித்ரா இருக்கும் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
ஆனால் சிவகார்த்திகேயன் நடிகர் சதிஷின் நண்பர் என்பதால் அவர் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார் என சதிஷ் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
-@Ags_production #21
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 7, 2021
Shoot Started today @agscinemas @archanakalpathi @actorsathish @itspavitralaksh pic.twitter.com/D8hAjKgB6z