அமலா பாலின் படுக்கையறை கிளிக்ஸ்.. கம்பேக் தலைவி என கொண்டாடும் ரசிகர்கள்!

அமலா பாலின் படுக்கையறை கிளிக்ஸ்.. கம்பேக் தலைவி என கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், "அடடா, இத்தனை நாளாக இந்த மாதிரியான புகைப்படங்களையெல்லாம் மிஸ் பண்ணிட்டோம்" வா தலைவி வா என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை அமலா பால்: சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்த மூலம் அறிமுகமாகி, மைன, தெய்வத்திருமகள், 'தலைவா என முன்னணி நாயகர்களின் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை அமலா பால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு, தனது நீண்டகால நண்பரைத் திருமணம் செய்து கொண்ட அமலா பாலுக்கு அண்மையில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. ஆடுஜீவிதம் படத்தில் இவரின் நடிப்பு தேசியளவில் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், குழந்தை பிறப்பிற்கு பிறகு மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Amala Paul

பழைய ஃபார்முக்கு வந்த அமலா பால்: பிரசவத்திற்குப் பிறகு சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட அமலா பால், தீவிர உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் தற்போது கணிசமாக எடையை குறைத்து மீண்டும் தனது பழைய ஸ்லிம்மான தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு முன்னதாக சோசியல் மீடியாவில் கிளாமரான புகைப்படங்களை அள்ளி தெளித்து வந்த அமலா பால், இடையில் அத்தகைய போஸ்ட்களை குறைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் முழுவீச்சில் சினிமாவில் 'செகண்ட் இன்னிங்ஸ்' ஆடத் தயாராகி விட்டதை உணர்த்தும் வகையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Amala Paul

படுக்கையறை கிளிக்ஸ்: தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படுக்கையில் சாய்ந்தபடி போர்வையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மிகவும் கவர்ச்சியாகவும் ஸ்டைலிஷாகவும் போஸ் கொடுத்துள்ளார் அமலா பால். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அடடா... இத்தனை நாளா இந்த லுக் மிஸ் ஆச்சு.. இதுக்குத்தான் காத்திருந்தோம்... தலைவி இஸ் பேக் எனச் சொக்கிப்போய் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். நடிகை அமலா பால் இந்த போட்டோக்களை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளிய சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
 

LATEST News

Trending News