கேன்சர் பாதித்த நிலையிலும் ஓட்டு போட்ட நடிகை

கேன்சர் பாதித்த நிலையிலும் ஓட்டு போட்ட நடிகை

தமிழில் அங்காடி தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சிந்து, கேன்சர் பாதித்த நிலையிலும் தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

தமிழில் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சிந்து. இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். பலரின் உதவியால் சிந்துவின் ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்தது.

சிந்து

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்திருக்கிறார். தான் வாக்கு செலுத்தி பின் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES