குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் கமல்ஹாசன் மற்றும் சூர்யா- இதோ பாருங்க, யாரெல்லாம் வந்தார்கள்
தமிழகத்தில் ஏன் இந்தியாவுக்கே இன்று முக்கியமான நாள்.
மக்களை இனி 5 வருடத்திற்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மாணிக்கப்போகும் நாள் இது.
இந்த நாளை எதிர்நோக்கி தான் இத்தனை நாட்கள் அரசியல்வாதிகள் பிரச்சாரங்களாக மேற்கொண்டனர்.
காலை முதல் எல்லோரும் வாக்களிக்க தொடங்கிவிட்டனர்.
அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் வாக்களித்து முடித்துவிட்டார். அவருடன் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷாரா ஹாசன் வந்துள்ளனர்.
மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டையில் அவர் தனது கடமையை முடித்துள்ளார்.
அதேபோல் ஹிந்தி பிரச்சார சபாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஓட்டுபோட்டு முடித்துள்ளனர்.