வலுவான குடும்பத்தை பிரிக்க முடியாது!!ஜேசன் சஞ்சய்யை பாராட்டிய திவ்யா சத்யராஜ்..
ஜேசன் சஞ்சய்
இயக்குநராக சிக்மா படத்தினை இயக்கியதன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி இருபவர் தான் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சிக்மா படம் வரும் அக்டோபர் 2 ஆம்தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பெற்றோர்களை விட்டுக்கொடுக்காமல் பக்குவமாக பேசி வருகிறார் ஜேசன்.

இந்நிலையில் சத்யராஜின் மகளும் திமுக உறுப்பினருமான திவ்யா சத்யராஜ், இன்ஸ்டாகிராமில், ஜேசன் பேசியது குறித்து பாராட்டியுள்ளார்.
குடும்பத்தை பிரிக்க முடியாது
அதில், ஜேசன் சஞ்சய்யின் பேட்டிகளை நான் பார்த்தேன், அவர் மிகவும் எளிமையாகவும், அதேசமயம் எதார்த்தமாகவும் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறார். அவருடைய இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இந்நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
ஒரு அழகான, பலமான குடும்பத்தை வெளியிலிருந்து வரும் நபர்களால் ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியாது, உங்களுடைய சிக்மா படம் மிகப்பெரிய வெற்றியடைய என் வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த பலரும் ஒருவேளை திரிஷாவை மறைமுகமாக சாடியிருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.