'நேரலையில் கதறி அழுத CookWithComali தர்ஷா!'.. மீண்டும் ரசிகர்களிடம் சொன்னது என்ன?

'நேரலையில் கதறி அழுத CookWithComali தர்ஷா!'.. மீண்டும் ரசிகர்களிடம் சொன்னது என்ன?

“முள்ளும் மலரும்” தொடரில் நடித்த தர்ஷா குப்தா, தற்போது சன் டிவியில் “மின்னலே” விஜய் டிவியில் “செந்தூரப்பூவே” தொடர்களிலும், நடித்து வருகிறார்.

தவிர விஜய் டிவியின் தெறி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த ஷோவில் இவருக்கும் புகழுக்குமான காம்போ பலரும் ரசிக்கும் படியான ஒன்றாக மாறியது.  தவிர, விதவிதமான புடவை போட்டோஷுட்களும், குக் வித் கோமாளி ஷோவும் தர்ஷா குப்தாவின் வைரல் வளர்ச்சிக்கு உதவியது.  அண்மையில் தான் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை ரசிகர்களுடன் கொண்டாடி நன்றி சொன்னார் தர்ஷா. இதனிடையே மிக அண்மையில் ரசிகர்களுடன் நேரலையில் தர்ஷா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் தர்ஷா குப்தா, முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதற்காக சிறு வியாபாரிகளிடம் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக எழுந்த மோசடி குற்றச்சாட்டுகளால் நேரலையில் கண்கலங்கிய தர்ஷா, ஒவ்வொரு தயாரிப்புக்கும் நேரம் ஒதுக்கி, அதற்கென ஒரு புடவை கட்டி இன்ஸ்டாவில் பதிவுகள் போடுவதற்கு நேரசூழ்நிலை சரிவர அமையவில்லை என்றும், அத்துடன் சிறுவியாபாரிகளிடம் தான் விளம்பரத்துக்காக எந்த பணமும் பெறாமல் உதவும் நோக்கத்திலேயே செய்ததாகவும், ஆனால் அதை ஏதோ அடுத்தவர்கள் பணத்தில் பிழைப்பது போல் கூறுகிறார்கள் என்றும் கூறி கதறி அழுதார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ரசிகர்களுடன் அடுத்த நாள் நேரலையில் தோன்றிய தர்ஷா குப்தா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில், “என் ரசிகர்கள் எல்லாருமே என் மீதான அன்புடன் இருக்கிறீர்கள். என் அம்மாவுக்கு அடுத்து நான் ஃபீல் பண்ணா, நான் ஒரு பிரச்சனையில் இருக்கும்போது எனக்காக ஃபீல் பண்ணுவதற்கு இவ்வளவு பேர் இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேத்து நான் அப்செட்டாக இருந்தேன்” என பேசியுள்ளார். அத்துடன் தன் முகத்தில் பிம்பிள்ஸ் இருந்ததால் டிப்ரஸனாக இருந்ததாகவும், முகம் தான் முக்கியம் எனும் போது அது மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருந்ததாகவும், கோயில்களுக்கு நிறைய சென்றதாகவும் கூறியுள்ளார். இனி எல்லா வகையிலும் திரும்பவும் ஆக்டிவாக இருக்கப் போவதாகவும் தனக்கு பிடித்த கோமாளிகள் புகழ் மற்றும் சிவாங்கி தான் என தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES