Sydney Sweeney: மிரர் செல்ஃபி குயின்னு பட்டம் கொடுத்துடலாமா? கிறங்க வைக்கும் சிட்னி ஸ்வீனி!
சென்னை: ஹாலிவுட்டின் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வேகமாக உயர்ந்து வருபவர் சிட்னி ஸ்வீனி. Euphoria, The White Lotus, Anyone But You, Madame Web உள்ளிட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களின் மூலம் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக Euphoria தொடரில் அவரது துணிச்சலான நடிப்பும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றன.
Anyone But You திரைப்படத்தில் கிளென் பவலுடன் அவர் நடித்த காதல் காட்சிகளும், இருவரின் கெமிஸ்ட்ரியும் சமூக வலைதளங்களில் நீண்ட நாட்கள் பேசப்பட்டன. அதேபோல், அவரது கிளாமர் நடிப்பும், தன்னம்பிக்கையான நடிப்பும் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
ஹாலிவுட்டில் தற்போது அதிகம் பேசப்படும் கிளாமர் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சிட்னி ஸ்வீனி, படங்களை விட சமூக வலைதள பதிவுகளின் மூலமும் அடிக்கடி டிரெண்டாகி வருகிறார். குறிப்பாக அவர் வெளியிடும் போட்டோஷூட்கள், பிகினி புகைப்படங்கள், மிரர் செல்ஃபிகள் என ஒவ்வொரு பதிவும் சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து விடுகிறது.
அந்த வரிசையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய மிரர் செல்ஃபி புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றன. தனது தோழியுடன் இணைந்து கண்ணாடி முன் இருந்து எடுத்துள்ள இந்த செல்ஃபிகளில், லைட் கிரீன் மற்றும் பிங்க் நிற கேஷுவல் உடையில் செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். இயல்பான மேக்கப், க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள், கவர்ச்சியான லுக் என ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சிரித்தபடியும், உற்சாகமான போஸ்களிலும், மிரர் முன்பு எடுத்த செல்ஃபிகளிலும் சிட்னி ஸ்வீனி தனது வழக்கமான கூல் ஸ்டைலை வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும் ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் குவித்துள்ளன. "Mirror Selfie Queen", "Natural Beauty", "Hollywood Barbie", "Absolutely Gorgeous" என ரசிகர்கள் பலரும் அவரது அழகையும் ஸ்டைலையும் பாராட்டி வருகின்றனர்.
நடிப்பு, கிளாமர், ஃபேஷன், பிராண்ட் என அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து தனது மார்க்கெட்டை உயர்த்தி வரும் சிட்னி ஸ்வீனி, தற்போது ஹாலிவுட்டின் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அதனால் அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த மிரர் செல்ஃபி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இணையவாசிகளின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளன.