விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியல் என்றோடு கடைசியாக ஒளிபரப்பாகிறது தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஓடுகிறது. அதில் ஒன்று தான் காற்றின் மொழி.
2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய அதிரடி திருப்பங்கள், காதல், குடும்பம் என எல்லாம் கலந்து கலவையாக இந்த சீரியல் இருந்தது.
இப்போது சீரியலில் நாயகன்-நாயகி திருமணம் குறித்த கதைக்களம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் இயக்குனர் என்னென்ன திருப்பங்கள் வைத்துள்ளார் என தெரியவில்லை.
இந்த நிலையில் காற்றின் மொழி சீரியல் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 9ம் தேதியுடன் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
திடீரென இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் என்ன இதற்குள் சீரியல் முடிவடைகிறது என வருத்தத்தில் உள்ளனர்.