அந்த படத்தை விட 4 மடங்கு வலிமை படத்தில் இது சூப்பராக இருக்கும்- பிரபலத்தின் சூப்பர் தகவல்
இளம் இயக்குனர் வினோத் கதையில் அஜித் நடிப்பில் தயாராகி வருகிறது வலிமை படம்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் மற்றும் வினோத் இருவரும் இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக அஜித்துடன் பணிபுரிகின்றனர்.
படத்தின் ஆரம்பம் என்னவோ வேகமாக தான் நடந்தது, ஆனால் அவர்களின் வேகத்தை கொரோனா வந்து கெடுத்துவிட்டது.
இப்போது படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஒருபக்கம் வேகமாக நடக்கின்றன. வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் லுக் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தில் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிந்துள்ள திலீப் அவர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் படம் குறித்து பேசும்போது, கைதி படத்தை விட சண்டை காட்சிகள் இப்படத்தை 4 மடங்கு சூப்பராக வந்துள்ளது.
கண்டிப்பாக ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.