பார்ட்டியில் அத்துமீறிய தயாரிப்பாளர் மகன்!! பளார்விட்டு பணத்தை வீசிய நடிகை..

பார்ட்டியில் அத்துமீறிய தயாரிப்பாளர் மகன்!! பளார்விட்டு பணத்தை வீசிய நடிகை..

தயாரிப்பாளர் மகன்

பிரபல தயாரிப்பாளரின் மகன் என்பதால் அவரின் வாரிசு, பல இடங்களிலும் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு அத்துமீறி நடந்து கொள்வதை சகஜமாக வைத்திருக்கிறார். பண பலம், பின்னணி இருப்பதால் அவரை யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை.

பார்ட்டியில் அத்துமீறிய தயாரிப்பாளர் மகன்!! பளார்விட்டு பணத்தை வீசிய நடிகை.. | Actress Slaps Producer S Son At Success Party

 

சமீபத்தில் நடந்த ஒரு பிரமாண்ட படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கோலிவுட்டின் டாப் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, அங்கே வந்த தயாரிப்பாளரின் வாரிசு, போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருந்த டாப் நடிகையிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார்.

நடிகையோ ஆரம்பத்தில் பொறுமையாக எச்சரித்தும், அந்த வாரிசு நபர் தன்னுடைய எல்லையை மீறி, நான் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற தோரணையில் அத்துமீறியிருக்கிறார்.

 

பளார்விட்ட நடிகை

அவரின் அத்துமீறலால் மொத்தமாக பொறுமையிழந்த நடிகை, பார்ட்டி என்றும் பாராமல், சுற்றியிருப்பவர்கள் என்றும் பாராமல், சட்டென அந்த வாரிசின் கன்னத்தில் பளார் விட்டுள்ளார். அத்தோடும் நிற்காமல் அந்த நபர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை அப்படியே அவர் முகத்திலேயே தூக்கிவீசிவிட்டு, உன் பணமும் வேண்டாம், உன் படமும் வேண்டாம் என்று ஆவேசமாக கத்தியுள்ளார்.

வாரிசுக்கு நடந்த இச்சம்பவம், பார்ட்டி நடந்திய நடிகர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பார்ட்டி கூட்டத்தையும் உறைய வைத்துள்ளது. சுதாரித்துக் கொண்ட நடிகர், உடனே இருவருக்கும் இடையே புகுந்து சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார்.

LATEST News

Trending News