காவேரி மிஸ் தான் தனது அம்மா என அறியும் அம்மு... பரபரப்பான மகாநதி சீரியல் புரொமோ

காவேரி மிஸ் தான் தனது அம்மா என அறியும் அம்மு... பரபரப்பான மகாநதி சீரியல் புரொமோ

மகாநதி

விஜய் தொலைக்காட்சியில் அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி.

4 அக்கா-தங்கைகளின் கதையாக ஆரம்பிக்கப்பட்டது இப்போது விஜய்-காவேரி ஜோடியின் கதையாக மாறிவிட்டது.

காவேரி மிஸ் தான் தனது அம்மா என அறியும் அம்மு... பரபரப்பான மகாநதி சீரியல் புரொமோ | Mahanadhi Serial 4Th 5Th June 2026 Promo

ராகவ் ஏற்படுத்திய விபத்தால் காவேரி பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். காவேரி இறந்துவிட்டார் என இருந்த விஜய் அவரைப்பார்த்ததும் சந்தோஷப்பட்டார், ஆனால் தன்னை காவேரிக்கு சுத்தமாக தெரியவில்லை என்றதும் மனம் உடைந்துபோனார்.

கடைசியாக கதையில் நர்மதா பிரச்சனை தான் சென்றது, அதை வழக்கம் போல் விஜய் கூலாக பேசி முடித்துவிட்டார்.

புரொமோ

தற்போது மகாநதி சீரியலின் புதிய புரொமோ வெளியானது.

அதில், அம்மு தனது பாட்டியிடம் காவேரி மிஸ் என் அம்மா போலவே உள்ளாரே, இருவரும் ஒரே மாதிரி இருப்பார்களா என பல கேள்விகள் கேட்கிறார்.

அம்முவின் கேள்விகளை தாங்க முடியாமல் அவர் காவேரி மிஸ் தான் உன் அம்மா என்கிறார். அதைக்கேட்டதும் அம்மு ஷாக் ஆகி நிற்கிறார், அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES