குக் வித் கோமாளி ஃபைனல் : தீடீர் மாற்றத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் ஃபைனலில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை ரசிகர்கள் வைத்து வரும் நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தகுதி பெற்றிருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் டைட்டிலைப் பெற்று வெற்றியாளராவார்.
இந்தநிலையில் இந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் ஃபைனல் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் நிகழ்ச்சிக்குழு நேற்று வெளியிட்ட ப்ரமோ வீடியோக்களின் படி இந்த வாரம் ஃபைனல் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்த வாரம் செலிபிரிட்டி வாரம் என்று அறிவித்திருக்கும் நிகழ்ச்சிக்குழு இந்த போட்டியில் கலந்துகொண்ட குக்’கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான ஒருவரை அழைத்து வந்திருப்பதும் ப்ரமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
கனி தனது தங்கையை நிரஞ்சனாவையும், ஷகிலா தனது மகளையும் அழைத்து வந்துள்ளனர். அஸ்வின் நடன இயக்குநர் சாண்டியையும், பவித்ரா தனது நண்பரையும் அழைத்து வந்துள்ளனர். எனவே இந்த வாரத்தின் இறுதி நாட்கள் நிகழ்ச்சி களைகட்டும் என்பதாலும் இறுதிப்போட்டி மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளிப் போயிருப்பதாலும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.