இயக்குனர் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை விதிக்கக்கோரி மனு! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு

இயக்குனர் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை விதிக்கக்கோரி மனு! சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் இந்தியன் 2, இப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் -2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES