ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக களமிறங்கும் சீரியல் - மிகவும் வித்யாசமான கதைக்களத்தில்
முன்னணி சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று ஜீ தமிழ்.
இதில் தற்போது செம்பருத்தி, யாரடி நீ மோஹினி, நீதானே என் போன் வசந்தம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
மேலும் தற்போது மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
ஆம் பெண் காவல் துறை அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.
' சித்திரம் பேசுதடி ' எனும் தலைப்பில் உருவாகியுள்ள இந்த சீரியல், வெகுவிரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.