பில்லா நயன்தாரா போல டூபீஸில் ருக்மிணி வசந்த்?.. ஏஐ டீப் ஃபேக்கா? அல்லது உண்மையா? என ஒரே குழப்பம்!

பில்லா நயன்தாரா போல டூபீஸில் ருக்மிணி வசந்த்?.. ஏஐ டீப் ஃபேக்கா? அல்லது உண்மையா? என ஒரே குழப்பம்!

பெங்களூர்: ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டத் திரைப்படமான 'டிராகன்' படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சியில், அவரது தோற்றமும் வசன உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதைத்தொடர்ந்து, இந்த 29 வயது பெங்களூரு நடிகை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

திரையில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான, பாரம்பரிய உடைகளில் தோன்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ருக்மிணி வசந்த், தற்போது எதிர்பாராத விதமாக மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் வெளிவந்துள்ளார். நீச்சல் குளம் ஒன்றின் அருகில், பச்சை நிற பிகினி அணிந்து, படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் அவர் இருக்கும் ஒரு சிறப்பு வீடியோ, இணையத்தில் சூறாவளியாகப் பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே, இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்று, காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ருக்மிணி வசந்த் தனது கேரியரில் இவ்வளவு துணிச்சலான பிகினி உடையில் தோன்றுவது இதுவே முதல்முறை என்பதால், நெட்டிசன்கள் இவ்வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். அவரது கவர்ச்சியான தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

புடவையிலும், பாரம்பரியப் உடைகளிலும் பார்த்த தங்கப்பூவா இது என்றும் காந்தாரா 2 படத்திலேயே கவர்ச்சி ராணியாக நடித்திருந்தார். தற்போது, இவ்வளவு போல்டான தோற்றத்தில் பில்லா நயன்தாரா போல மாறிவிட்டாரே என ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இருப்பினும், இந்த வீடியோ குறித்து திரையுலக வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கலவையான விவாதங்கள் நடந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பெருகியுள்ளதால், இது ஏஐ டீப்ஃபேக் வீடியோவாக இருக்கலாம் என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.


டிராகன் படத்தில் தான் இப்படியொரு பிகினி சீனில் ருக்மிணி வசந்த் தாராளம் காட்டி நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை படக்குழு மற்றும் ருக்மிணி வசந்த் தரப்பில் இந்த பிகினி வீடியோவுக்கும் வைரலாகும் புகைப்படங்களுக்கும் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏஐ டீப் ஃபேக் வீடியோவாக இருந்தால் கண்டிப்பாக நடிகைகளுக்கு ரொம்பவே சங்கடமான சூழல் நிலவி உள்ளது தெளிவாகி விடும் என்கின்றனர். ஏஐ வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாமல் இப்படி மோசடிகளுக்கு பயன்படுத்துவது தவறு என்கின்றனர்.
 

LATEST News

Trending News

HOT GALLERIES