கிளுகிளு போஸ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. இன்ஸ்டாகிராம் மூலம் லட்சகணக்கில் சம்பாதிக்கும் நடிகை!

கிளுகிளு போஸ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. இன்ஸ்டாகிராம் மூலம் லட்சகணக்கில் சம்பாதிக்கும் நடிகை!

மும்பை: சினிமா உலகில் ஒருகாலத்தில் டாப் நடிகையாக உயர்வதே அதிக வருமானம் பெறும் ஒரே வழியாக கருதப்பட்டது. பெரிய படங்களில் நடித்து கோடிகளில் சம்பாதிப்பதே நடிகைகளின் முக்கிய இலக்காக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமையே மாறி வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் நடிகைகள் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை நேகா சர்மா ஒரு முக்கிய உதாரணமாக திகழ்கிறார். 38 வயதான இவர், காஸ்ட்யூம் டிசைனிங் படித்தவர். தனது திரை வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களின் மூலம் தொடங்கிய இவர், பின்னர் ஹிந்தி திரைப்படங்களிலும் வாய்ப்புகளை பெற்றார். தொடர்ந்து தமிழில் ஜூங்கா, சோலோ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். 

Neha Sharma instagram

நடிகை நேகா சர்மா: தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், அதனை கவலையாக எடுத்துக் கொள்ளாமல் புதிய வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது சமூக வலைதளங்களில் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்து, அதனை வருமானமாக மாற்றிக் கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி 1 மில்லியன் பாலோவர்களைவைத்து இருக்கும் நேஹா ஷர்மா, தனது ரசிகர்களுக்காக பிரத்தியேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தில் இணைவதற்காக ரசிகர்கள் மாதம் ரூ.290 கட்டணம் செலுத்த வேண்டும்.

மாசம் 7 லட்சம் வருமானம்: இந்த திட்டத்தில் இதுவரை 2,400 பேர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்தை இவர் பெறுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு முன்னணி நடிகை சம்பாதிக்கும் வருமானத்துடன் ஒப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், தற்போதைய நடிகைகள் தங்கள் தொழில் வாழ்க்கையை எவ்வாறு புதிய கோணத்தில் பார்க்கின்றனர் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்தாலும், அதனை எதிர்மறையாக பார்க்காமல், சமூக வலைதளங்களை பயன் படுத்தி தங்களுக்கான தனி வருமான பாதையை உருவாக்கிக் கொள்வது அதிகரித்து வருகிறது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES