TN 2026 தங்க நட்சத்திரம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

TN 2026 தங்க நட்சத்திரம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

TN 2026

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் நட்டி நட்ராஜ். நடிகராக மட்டுமின்றி பல ஹிட் திரைப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் TN 2026 தங்க நட்சத்திரம்.

வட நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒருவர் எப்படி சினிமாவில் கால் பதித்து அதன்பின், அரசியலில் களமிறங்கி மாற்றத்தை கொண்டு வருகிறாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உமாபதி ராமையா இப்படத்தை இயக்க எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

இப்படத்தில் வந்த பல காட்சிகள் நிகழ் காலத்தில் உள்ள நடிகர் ஒருவரை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது என்று படம் பார்த்தவர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர். மேலும் இப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது.

TN 2026 தங்க நட்சத்திரம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Tn 2026 Movie 3 Days Box Office Collection

TN 2026 தங்க நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES