பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதல் - இரண்டாம் திருமணத்தை உறுதி செய்த நடிகர் விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிக்குழு எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
இதன்பின், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை, நடிகர் விஷ்ணு விஷால் காதலிப்பதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.