சூப்பர் ஹிட் இயக்குனருடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. படத்தின் டைட்டிலே தாறுமாறா இருக்கே!

சூப்பர் ஹிட் இயக்குனருடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. படத்தின் டைட்டிலே தாறுமாறா இருக்கே!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்த வைகைப்புயல் வடிவேலு கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார்.

இதன் காரணமாக தற்போது காமெடி செய்ய தெரியாதவர்கள் பலரும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தேவையில்லாமல் அரசியல் சர்ச்சையில் சிக்கிய தன்னுடைய சினிமா கேரியரை கெடுத்துக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக வடிவேலு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் மொத்த படமும் தோல்வியை தழுவியது. இதற்கிடையில் இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் ஷங்கர் தயாரிப்பில் ஒரு படம் உருவானது.

ஆனால் அதில் வடிவேலுவின் தலையீடு அதிகமாகவும் சம்பள விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாலும் அந்தப் படம் கைவிடப்பட்டது. ஒருவேளை அந்த படத்தில் சொல்பேச்சு கேட்டு ஒழுங்காக நடித்திருந்தால் இந்நேரம் தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி நாயகனாக வலம் வந்திருப்பார்.

சரி போனது போகட்டும். தற்போது தன்னுடைய எவர்கிரீன் கேரக்டரான நாய் சேகர் என்ற டைட்டிலுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை காமெடிக்கு பெயர் போன இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார். முன்னதாக பேய்மாமா என்ற பெயரில் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை உருவாக்க நினைத்தார் சுராஜ்.

ஆனால் வடிவேலு கொஞ்சம் பந்தா காட்டியதாக தெரிகிறது. இதனால் அந்த படத்தை யோகி பாபுவை வைத்து எடுத்து முடித்து விட்டார். கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் தனக்கு பட வாய்ப்பு வரவில்லை என புலம்பிய வடிவேலை பார்க்கவே பாவமாக இருந்தது.

vadivelu-cinemapettai

vadivelu-

இந்நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் இயக்குனருடன் களமிறங்க உள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்க ஆசைப்படாமல் மீண்டும் தன்னுடைய கேரியரில் வடிவேலு கவனம் செலுத்தினால் நல்லது என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES