திருமணத்திற்கு பின் நடிகையுடன் அப்படியொரு ரோலில் ராஷ்மிகா மந்தனா? பத்திட்டு எரியும் பாலிவுட்..
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனையடுத்து தமிழ், இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி நடித்து நேஷ்னல் கிரஷ் என்ற பெயரெடுத்த ராஷ்மிகா நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனா எடுத்துள்ள தைரியமான முடிவு குறித்த தகவல் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிரவைத்துள்ளது.

அதாவது காக்டைல் 2 படத்தில் ராஷ்மிகா கமிட்டாகி நடிக்கவுள்ளார். படத்தில் கதாநாயகனாக ஷாகிக் கபூர் நடிக்கிறார். அதேபோல் இரண்டாவது நாயகியாக நடிகை க்ரித்தி சனோன் நடிக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா - க்ரித்தி என இருவரும் தன் பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளார்களாம்.
படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். திருமணத்திற்கு பின் தன் பாலின ஈர்ப்பாளர் ரோலில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.