அவனின்றி அணுவும் அசையாது.. பிறந்த நாளில் அண்ணாமலையாரை குடும்பத்துடன் வணங்கிய SK
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனுடன் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கும் தெரியும், ”அவனின்றி (ஈசன்) அணுவும் அசையாது” என்பது. அதனால் தான் தனது பிறந்த நாளில் சிவனை வழிபட குடும்பத்துடன் வந்துள்ளார் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் 26ஆவது படமான சேயோன் படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என இரண்டுமே நேற்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது படம் வெற்றி தோல்விகளைக் கடந்து மினிமம் கேரண்டி என்ற வசூலை தொடர்ந்து அள்ளி வருவதால், இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.