கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டும் தனுஷ் பட நடிகை

கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டும் தனுஷ் பட நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வருவதற்கே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நடிகை தயாரிப்பாளர்களிடம் முரண்டு பிடிப்பதால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தவர் சுரபி. அதுமட்டுமில்லாமல் விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி, ஜெய் நடித்த புகழ் போன்ற படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

வந்த புதிதில் முன்னணி நாயகியாக வந்துவிடுவார் என உசுப்பேத்தியே நிலையில் தொடர்ந்து கிடைத்த சில படவாய்ப்புகளை தவிர்த்து விட்டு முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்ததால் வந்தது வினை. கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளையும் மிஸ் செய்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கிலும் இதே நிலைமைதான். இந்நிலையில் தயாரிப்பாளர் ஓருவர் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக அந்த நடிகையிடம் கேட்டுள்ளார். கொஞ்சம் நடிகருடன் நெருக்கமான கதாபாத்திரம் என்பதால் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் என தெரிவித்து விட்டாராம். இதற்காக எதற்கு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும், சில லட்சங்களுக்கு பல நடிகைகள் நடிக்க தயாராக இருக்கிறார்கள் என டாட்டா காட்டி விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.

 

surabhi-cinemapettai

surabhi

இது குறித்து தன்னுடைய வட்டாரங்களில் பட வாய்ப்பே இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக்கொள்ள மாட்டேன் என கூறினாராம் சுரபி.

LATEST News

Trending News