ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா
ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஆனால், இதுவரை இவர்கள் இருவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக திருமணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண செய்திகள் ஒரு பக்கம் உலா வர, மறுபக்கம் இவர்களுடைய சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் உலா வருகின்றன.

முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என கூறப்படுகிறது. மேலும், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு ரூ. 50 முதல் ரூ. 70 கோடி இருக்கும் என்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.