சீரியலில் நடிக்க வருவதற்கு முன் கோமதி பிரியா எப்படி இருந்தார் பாருங்க.. போட்டோ இதோ
சிறகடிக்க ஆசை சீரியல் நம் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக சின்னத்திரையில் டாப் 10ல் உள்ள இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன்பே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியலில் நடித்திருக்கிறார். மேலும் சில நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், நடிகை கோமதி பிரியா சீரியலில் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் என சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க:

