போட்டியாளரிடம் அவரின் கணவர் இறந்ததாக கூறிய பிக்பாஸ், அதிர்ச்சியில் அவர் எடுத்த முடிவு

போட்டியாளரிடம் அவரின் கணவர் இறந்ததாக கூறிய பிக்பாஸ், அதிர்ச்சியில் அவர் எடுத்த முடிவு

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது, மேலும் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை தட்டி சென்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழை போலவே பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம், தற்போது பிக்பாஸ் சீசன் 3 நடந்து வருகிறது, இதை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே சண்டையும் போட்டியுமாக இருந்து வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆம், முக்கிய போட்டியாளரான பாக்கியலட்சுமியை Confession Room-ற்கு அழைத்த பிக்பாஸ் அவரின் முன்னாள் கணவர் இறந்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான பாக்கியலட்சுமி அவரின் கணவர் நீண்ட நாளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும். அவரின் மகனிடம் கவனித்து கொள்ளும் படி கூறியதாகவும் சொல்லியுள்ளார்.

அதன்பின் நீண்ட யோசனைக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் தொடரவும் முடிவெடுத்தார் போட்டியாளர் பாக்கியலட்சுமி.

 

LATEST News

Trending News

HOT GALLERIES