ஷங்கரின் அடுத்த இரண்டு படங்களிலும் ஹீரோயின் இவர் தான்!

ஷங்கரின் அடுத்த இரண்டு படங்களிலும் ஹீரோயின் இவர் தான்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரண் தேஜா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ராம்சரண் ஜோடியாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கைரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து ராம்சரண் தேஜா படத்தை முடித்துவிட்டு ’அந்நியன்’ படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். இந்த படத்தின் நாயகனாக ரன்வீர்சிங் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்திலும் நாயகியாக கைரா அத்வானியே நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே ஷங்கரின் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கைரா அத்வானி நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES