பணத்தாசை சூரியை மோசமான ஆளாக மாற்றிவிட்டது.. பரபரப்பை கிளப்பும் விஷ்ணு விஷால்

பணத்தாசை சூரியை மோசமான ஆளாக மாற்றிவிட்டது.. பரபரப்பை கிளப்பும் விஷ்ணு விஷால்

கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக காடன் என்ற படம் வெளியாக உள்ளது. கும்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது. மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை காடன் திரைப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இதற்கான விழா ஒன்றில் விஷ்ணு விஷால் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் என்ன என்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்து எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

 

இந்நிலையில் கார்டன் படத்தின் புரமோஷன் விழாவில் விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகிய இருவருக்கும் இடையேயான நில பஞ்சாயத்து பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பியதில் சூரி பற்றி தெரியாத நிறைய உண்மைகளை விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடத்திற்கு முன்பு தன் தந்தை அவருக்கு கடவுளாக தெரிந்ததாகவும், ஆனால் அவருடைய பேராசையும் பணத்தாசையும் கடவுளாக தெரிந்த என்னுடைய தந்தையை தற்போது 420 என சொல்லும் அளவுக்கு மாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

soori-vishnuvishal-cinemapettai

soori-vishnuvishal-

சூரி உடனான நிலத்தகராறில் பண பரிமாற்றங்கள் நடந்தில் தனக்கும் தன் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எங்கள் மீது சூரி கொடுத்த புகாருக்கு பக்கம் பக்கமாக என்னால் விளக்கம் கொடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதெல்லாம் தமிழ் சினிமாவில் தற்போது நல்ல பெயர் வைத்து நடந்து கொண்டிருக்கும் சூரியின் கருப்பு பக்கங்களை மக்களுக்கு காட்ட வேண்டியிருக்கும் எனவும், அதற்கான நேரம் வந்தால் கண்டிப்பாக சூரியை பற்றிய பல உண்மைகளை வெளியிடுவேன் எனவும் விஷ்ணு விஷால் ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES