காதல் பட நடிகர் பாபு மரணம் அடைந்தார், வெளியான அதிர்ச்சி தகவல்
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல்.
இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் காதல் பாபு.
இவர் அப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானார்.
மேலும் வீடியோ பதிவுகளின் மூலம் இவரின் இந்த கஷ்டத்தை அறிந்த ஒரு சிலர் இவருக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
இந்நிலையில் தற்போது காதல் பாபு மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஆட்டோவில் படுத்திருந்த பாபு, காலையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        