தனுஷ் விஜய் சேதுபதிக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு.. எந்தெந்த படங்களுக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தனுஷ் ஏற்கனவே ஆடுகளம் என்ற படத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்க உள்ளார்.
dhanush-asuran-national-award
அதேபோல் விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக துணை நடிகருக்கான தேசிய விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.
vijaysethupathy-superdeluxe
விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதுமட்டுமில்லாமல் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் 2 தேசிய விருதுகளை வாங்க உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.
othaseruppu
தனுஷ் ஏற்கனவே ஹிந்தி மற்றும் ஹாலிவுட்டில் கால் பதித்து விட்டார். விஜய் சேதுபதி தற்போது தான் ஹிந்தியில் கால் பதித்துள்ளார். ஆனால் அதற்குள்ளேயே தனுஷ் அளவுக்கு மூன்று படங்களில் ஒப்பந்தமாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
தனுஷை தொடர்ந்து அடுத்ததாக ஹாலிவுட்டுக்கு செல்லும் தமிழ் நடிகராக விஜய் சேதுபதி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் நாட்டிற்கே பெருமை சேர்த்த இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.