நயன்தாரா ரூட்டை பின்பற்றும் நடிகை அனுஷ்கா.. தயாரிப்பாளர்கள் பாவம்!
சூர்யா, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தவர் அனுஷ்கா ஷெட்டி.
தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக வலம் வந்த இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்போது அனுஷ்கா காட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் படங்களுக்கு வர மாட்டேன் என ஒப்பந்தம் போடும்போதே கண்டிஷன் போட்டுவிடுகிறார் நயன்தாரா.
தற்போது அதே போல் அனுஷ்காவும் காட்டி படத்தின் ப்ரோமோஷனுக்கு வர மாட்டேன் என ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போட்டுவிட்டாராம்.
அதனால் தான் அவர் நிகழ்ச்சிகள் எதற்கும் வரவில்லை என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். இந்நிலையில், நயன்தாரா ரூட்டை அனுஷ்கா பின்பற்றுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.