ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா! மாப்பிள்ளை இவரா, புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியலும் ரோஜா தான்.
இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முதலில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா, ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பிரியங்காவிற்கும், பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த அவரது திருமண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
ஆனால் அது திருமணம் கிடையாதாம், நடிகர் ராகுலுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்ததாம்.
அதன்பின் சில சொந்த பிரச்சனைகள் காரணமாக, இந்த திருமணம் நிச்சயதாரத்தில் நின்றுவிட்டது என நடிகை பிரியங்காவே தெரிவித்துள்ளராம்.
இதோ அந்த புகைப்படங்கள்..