நடிகரின் மடியில் உட்கார்ந்தபடி ரொமாண்டிக் போஸ்! நடிகையின் புகைப்படத்தை வெளியிட்ட வாரிசு நடிகர்
தமிழ் சினிமாவில் 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். தற்போது தனக்கு பின் தன் மகன் மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்கியுள்ளார்.
அப்படி வாரிசு நடிகராக 90களில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். ஆரம்பகாலத்தில் போதுமான வெற்றியை பெறாமல் இருந்த அருண் விஜய் சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பெரியளவில் பேசப்பட்டார்.
இதையடுத்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். அந்த வகையில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான சினம் படத்தின் பாடல் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கிய ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார்.
விரைவில் வெளியாகும் சினம் படத்தின் விளம்பரங்களில் ஈடுபட்டுள்ள அருண் விஜய் அடுத்ததாக சினம் பட நாயகி பலக் லால்வணி என்பவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அருண் விஜய்யின் மடியில் உட்கார்ந்த படி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.