ராஜபோதை.. நடிகை வீட்டு கதவை தட்டி.. வேலைக்காரியிடம் வேலை காட்டிய முன்னணி நடிகர்!

ராஜபோதை.. நடிகை வீட்டு கதவை தட்டி.. வேலைக்காரியிடம் வேலை காட்டிய முன்னணி நடிகர்!

சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த ஒரு பிரபல நடிகை குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பான கிசுகிசு பரவி வருகிறது. 

அண்டை மாநிலத்தில் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி, தனது முதல் படத்தில் ஒரு வாரிசு நடிகருடன் நடித்து கவனம் பெற்ற இந்த நடிகை, பின்னர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்து பிரபலமானார். 

இவரது படங்கள் ஒரு கட்டத்தில் தொடர்ந்து வெற்றியடிக்க, இவரது மார்க்கெட் உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், ஒரு உச்ச நடிகருடன் இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். 

அப்போது இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி, "யார் யாரை கமிட் செய்தது?" என்று பேசும் அளவுக்கு இருந்ததாம். ஆனால், இந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில், இவர்களது நடவடிக்கைகள் நடிகரின் மனைவியை சந்தேகப்பட வைத்தனவாம். 

மனைவி எச்சரித்த பிறகும் நடிகர், இந்த நடிகையை விடாமல் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நடிகை மற்றொரு மொழிப் படத்தில் வேறொரு நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்த காட்சிகளைப் பார்த்து, இந்த உச்ச நடிகர் அதிர்ச்சியடைந்தாராம். 

இதனால், ஒருநாள் ராஜ போதையில் இருந்தபோது நேராக நடிகையின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினாராம். 

ஆனால், அப்போது நடிகை வீட்டில் இல்லை. அங்கு இருந்த பணிப்பெண்களிடம், "ஏன் அவள் இப்படி கிளாமராகவும், அந்த அளவுக்கு நெருக்கமாகவும் நடிக்கிறாள்? என்னை கழட்டிவிட பார்க்கிறாளா? இனி இப்படி நடிக்கக் கூடாது என்று சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு சென்றாராம். 

இதை பணிப்பெண்கள் நடிகையிடம் சொல்ல, அதிர்ச்சியடைந்த நடிகை, "நான் இல்லாதபோது வீட்டிற்கு வரும் அளவுக்கு ஆகிவிட்டதா? இனி இவரை சரிசெய்ய முடியாது" என்று முடிவெடுத்து, நடிகரை முழுமையாக கழட்டிவிட்டதாக பேச்சு அடிப்படுகிறது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES