அதை அணியாமல் மிரர் செல்ஃபி.. கண்ணாடியில் அப்பட்டமாக தெரிய.. கங்குவா ஹீரோயின்..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் திஷா பதானி, தனது அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்து வருபவர். இவர் நடிப்பை விடவும், சமூக வலைதளங்களில் வெளியிடும் வித்தியாசமான புகைப்படங்களால் அதிகம் பிரபலமடைந்தவர்.
தமிழ் சினிமாவில் இவரது முதல் படமாக, சூர்யாவின் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான கங்குவா படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால், இப்படத்தில் இவரது நடிப்பு பெரும் விமர்சனத்தை சந்தித்தது.
குறிப்பாக, படத்தின் முதல் 20 நிமிடங்களில் திஷா பதானியின் காட்சிகள் படத்தின் தரத்தை கெடுத்துவிட்டதாக இணையவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால், கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த விமர்சனங்களை பொருட்படுத்தாத திஷா பதானி, தற்போது பாலிவுட்டில் Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திஷா, சமீபத்தில் உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் பேசு பொருளாக மாறியுள்ளன. திஷாவின் இந்த புகைப்படங்கள் ஒருபுறம் பாராட்டை பெற்றாலும், மறுபுறம் அவரது நடிப்பிற்கு பதிலாக கவர்ச்சியை மட்டுமே முன்னிறுத்துவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இருந்தாலும், தனது பாணியில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் திஷா பதானி, சினிமாவில் தனது அடுத்த கட்ட பயணத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். Welcome To The Jungle படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.