குஜராத் கேப்டனுக்கு சுப்மன் கில்லுக்கு டாட்டா!! பாலிவுட் நடிகருடன் காதலில் சச்சின் மகள் சாரா...
இந்திய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனுமான சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதற்கிடையில் பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கருடன் காதலில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் தவறு என்று வதந்திகளுக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் சாரா டெண்டுல்கர் பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் டேட்டிங்க்ல் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
சித்தாந்த் சதுர்வேதி இதற்கு முன் அமிதாப் பச்சன் பேத்தியான நவ்யா நவேலி நந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து வந்ததாக தகவல் வெளியானது. அவரை தொடர்ந்து தற்போது சித்தாந்த், சச்சின் மகள் சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.