மாஸ்க் அணிந்து ஆட்டோவில் பயணித்த நடிகர் அஜித்- லேட்டஸ்ட் வீடியோ, செம வைரல்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்தவர்.
நடிகர் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று இருந்ததோ அதை முதன்முதலாக தமிழ் சினிமாவில் மாற்றியவர்.
அவரை கண்டு பலரும் இந்த முறையும் சரிதான் என பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.
அஜித் இப்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலை நடப்பதாகவும், சில காட்சிகளுக்காக படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம்.
அண்மையில் அஜித் துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கங்கள் பெற்றார், அந்த புகைப்படங்களும் டுவிட்டரில் வைரலாகின.
இப்போது என்னவென்றால் அஜித் முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு ஒரு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் டுவிட்டரில் வெளியாக தல ரசிகர்கள் அதை வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.