அழகுக்காக எதையும் செய்ய மாட்டேன் ஆனால்.. தைரியமாக சொன்ன ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.
கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். சமீபத்தில், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் சினிமாவில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அழகு குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எதுவும் செய்தது இல்லை. குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை.
அதற்கு முக்கிய காரணம் கடவுள் எனக்கு அழகிய முகத்தை கொடுத்துள்ளார். அது போன்று யாராவது அழகாக காட்சியளிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறில்லை" என்று தெரிவித்துள்ளார்.