கணவர் ஆர்யாவுடன் ரொமான்ஸ்!! நடிகை சாயிஷா வெளியிட்ட க்யூட் வீடியோ..
ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. இப்படத்தினை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்தார்.
கஜினிகாந்த் படத்தின் போது ஆர்யா மீது ஏற்பட்ட காதலிக்கு பின் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சினிமாவில் இருந்து விலகினாலும் உடலை கட்டுக்கோப்பாக பைக்க நடனம், உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தார். பின் பத்து தல படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம்போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் கண்வருடன் அந்நியன் படத்தில் குமாரி பாடல் ரொகேஷனில் ரோஜாப்பூக்களுக்கு நடுவில் ரொமான்ஸ் செய்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார் சாயிஷா. அவருட இருப்பது நடிகர் ஆர்யா தானா என்று கூறும் அளவிற்கு ஆர்யா அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.