இணையத்தில் வைரலாகும் நடிகை த்ரிஷாவின் வீடியோ.. ரசிகர்கள் ஷாக்
நடிகை த்ரிஷா கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். கடைசியாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். அடுத்து இவரது நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் படங்கள் வெளியாக உள்ளன.
ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் த்ரிஷா. சில மாதங்களுக்கு முன் தனது மகன் போன்று பாசமாக வளர்த்து வந்த அவருடைய நாய் குட்டி Zorro திடீரென உயிரிழந்து விட்டதாக த்ரிஷா தெரிவித்திருந்தார்.
மன வேதனையில் இருந்து வந்த இவர் மீண்டும் புதியதாக ஒரு நாய் குட்டியை வாங்கி வளர்த்து வந்தார்.
இந்நிலையில், தற்போது த்ரிஷா அவருடைய செல்ல பிராணியுடன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் இப்படி கூட ஒர்க் அவுட் செய்யலாமா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.