ஒரு நிகழ்ச்சிக்கு ஏழரை கோடி சம்பளமா? பணத்தில் புரளும் முன்னணி நடிகர்
சமீபகாலமாக நடிகர்கள் சினிமாவில் சம்பாதிப்பதை விட சின்னத்திரையில் பிரபலமான ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல கோடிகளை சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவருக்கு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏழரை கோடி சம்பளம் பேசுகிறார்களாம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர்கள் தொகுப்பாளர்களாக பங்கேற்றால் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி பல மடங்கு உயரும். இதையே அனைத்து சேனல்களும் கடைபிடித்து வருகின்றன.
இது தமிழுக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. அனைத்து மொழி டிவி சேனல்களுக்கும் இதுதான் தாரக மந்திரம். அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆர் கோடீஸ்வரர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
தமிழில் ஒரு காலத்தில் விஜய் டிவியில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி தான் அது. இந்த நிகழ்ச்சியை முதல் முதலில் ஹிந்தி உலகில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கினார்.
தமிழிலும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக சென்றது. தமிழில் மட்டுமல்லாமல் மொத்த தென்னிந்திய சினிமாவிலும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தெலுங்கில் கோடீஸ்வரர் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
jr-ntr
இதற்காக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஏழரை கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக முதல் 3 சீசன்களை நாகர்ஜுனா 4 கோடியே 50 லட்சத்திற்கு தொகுத்து வழங்கி வந்தார். கடந்த நான்காவது சீசனை சிரஞ்சீவி 9 கோடிக்கு தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.