கன்னித்தன்மையை 18 கோடிக்கு விற்பனை செய்த மாணவி.. வாங்கிய முன்னணி நடிகர்.. பகீர் தகவல்கள்..!

கன்னித்தன்மையை 18 கோடிக்கு விற்பனை செய்த மாணவி.. வாங்கிய முன்னணி நடிகர்.. பகீர் தகவல்கள்..!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழலில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட மார்ச் மாதத்திலேயே அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜென் Z தலைமுறையினர் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள் என்ற அச்சமும் கூடவே எழுகிறது. சமூகத்தில் குடும்ப வறுமை காரணமாக சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது வேதனைக்குரிய உண்மை. 

இது தவறு என்றும், அந்தப் பெண்களுக்கு அரசு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், சில இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் புதிய முறையும் உருவாகியுள்ளது. 

ஒன்லி ஃபேன்ஸ் போன்ற தளங்களில் வீடியோ கால், சாட், ஆபாசப் புகைப்படங்கள் என ஸ்மார்ட் போனிலேயே விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது. இதன் அடுத்த கட்டமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்று கோடிகளை ஈட்டியிருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விலைமாதுவாக போகும் பெண்களுக்கு எல்லாம் இது தெரிந்தால், அவர்களும் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லாரா என்ற 22 வயது மாணவி, எஸ்கார்ட் ஏஜென்ஸி தளம் மூலம் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ளார். 

அதிகபட்சமாக £1.7 மில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர்கள் எனப் பலரும் போட்டி போட்ட நிலையில், ஒரு ஹாலிவுட் நடிகர் லாராவின் கன்னித்தன்மையை ஏலத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிரைவஸி கருதி அந்த நடிகரின் பெயரை லாரா வெளியிடவில்லை. குடும்ப வறுமை மற்றும் பணத் தேவைக்காகவே இவ்வாறு செய்ததாகவும், இதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் லாரா பேட்டியளித்துள்ளது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. 

உலகம் எந்த திசையில் செல்கிறது என்றும், இன்றைய இளைஞர்கள் எப்படியெல்லாம் சம்பாதித்து சொகுசாக வாழ வேண்டும் என்பதை மட்டுமே சிந்திக்கிறார்களா என்றும் கேள்வி எழுகிறது. 

உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணத்துடன் வளரும் பல இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் இது தவறான முன்னுதாரணமாகி விடும். இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டிய படித்தவர்களே, படிக்கும் மாணவியின் கன்னித்தன்மையை வாங்க போட்டிப் போட்டு ஏலத்தில் பெரிய தொகை கொடுத்து வாங்குவதெல்லாம் சைக்கோத்தனமான மனநிலை கொண்டவர்களால் மட்டுமே முடியும் என நெட்டிசன்கள் அந்த அடையாளம் தெரியாத ஹாலிவுட் நடிகரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற கவலை மேலோங்குகிறது. இந்த சம்பவம், பெண்களை ஒரு பொருளாகவும், பாலியல் இச்சையை பணம் கொடுத்து வாங்கக்கூடிய ஒரு சந்தைப் பொருளாகவும் மாற்றும் அபாயகரமான போக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இளைஞர்கள் மத்தியில் தவறான மதிப்பீடுகளையும், அறநெறிகளையும் இது விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LATEST News

Trending News