VJ அஞ்சனாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரசிகர்.. பதில் சொன்ன கணவர்!

VJ அஞ்சனாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரசிகர்.. பதில் சொன்ன கணவர்!

சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பல இளம் பெண்மணிகள் ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர். அதில் முக்கிய இடம் எப்போதுமே சன் மியூசிக் VJ அஞ்சனாவுக்கு தான்.

அவருக்கு கல்யாணமாகியிருந்தாலும் இன்றும் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர ஒரு நாளும் குறைந்தபாடில்லை.

இப்போதும் VJ அஞ்சனா ஒரு புகைப்படம் வெளியிட்டால் பல்லாயிரம் லைக்குகள் குவிந்து வருகின்றன. இத்தனைக்கும் VJ அஞ்சனா பிரபல நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.

vj-anjana-cinemapettai-01

vj-anjana-

சமீபகாலமாக பிரபலங்கள் அனைவரும் பொழுது போகவில்லை என்றால் சமூக வலைதளங்களில் நேரடியாக ரசிகர்களிடம் உரையாட ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வகையில் அஞ்சனா சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ சொல்லி விட்டு, என்னை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசையா? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அஞ்சனாவின் கணவர், அட்ரஸ் வாங்கிக் கொடு, அனுப்பி வைத்துவிடுகிறேன் என கிண்டலடித்துள்ளார்.

vj-anjana-cinemapettai

vj-anjana-

அந்தளவுக்கு VJ அஞ்சனா அவரை டார்ச்சர் செய்வதாக அவரே அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ஒரு நெகடிவ் விஷயம் தன்னை நோக்கி வந்தால் அதை எப்படி பாசிட்டிவாக மாற்றி கடந்து சென்றுவிட வேண்டும் என்பதை அசால்டாக செய்துள்ளார் VJ அஞ்சனா.

LATEST News

Trending News