தொகுப்பாளினி டிடி-யா இது?.. பக்தி மயமாக மாறி புதிய லுக்

தொகுப்பாளினி டிடி-யா இது?.. பக்தி மயமாக மாறி புதிய லுக்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.

பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.

தொகுப்பாளினி டிடி-யா இது?.. பக்தி மயமாக மாறி புதிய லுக் | Host Latest Photos In An Movie Event

இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி நிகழ்ச்சி தான். சின்னத்திரை, வெள்ளித்திரை என கொடிகட்டி பறந்த நடிகை டிடி தற்போது அவ்வளவாக தொலைக்காட்சி பக்கம் வருவது இல்லை.

தற்போது, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா அடுத்து நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2. அதன் பூஜை நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு டிடி சேலையில் வந்திருக்கும் அழகிய புகைப்படங்கள். இதோ,  

LATEST News

Trending News